3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்


3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 Jan 2022 9:19 PM GMT (Updated: 2022-01-20T02:49:39+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 3-வது தவணை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்தவர்கள், 3-வது  தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையவர்களாவர். எனவே இன்று அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story