கர்நாடகத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொடும்


கர்நாடகத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொடும்
x
தினத்தந்தி 19 Jan 2022 9:38 PM GMT (Updated: 2022-01-20T03:08:31+05:30)

கர்நாடகத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும், அதற்கு மேலும் கூட வரலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாட்கள் ஊரடங்கை திரும்ப பெற வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு செய்ய வேண்டும் என்று மக்களும், வியாபாரிகளும் கூறி வருகிறார்கள்.

பரிசோதனை அதிகரிப்பு

கொரோனா பரவல் நிலையை அறிந்து கொண்டும், நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சரியான முடிவு எடுக்க உள்ளார். இதற்காக வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். 

கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால்தான் மற்றவர்களுடன் நட்புடன் பழக முடியும். பாதிப்பு இருப்பது உறுதியானால் சிகிச்சை பெற்று குணமடையலாம். எனவே தான் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா பரிசோதனை செய்யும்படி யாரையும் அரசு கட்டாயப்படுத்தவில்லை.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story