மாவட்ட செய்திகள்

மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை + "||" + Teacher commits suicide by setting fire

மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை மாதா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34). இவர், செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக அவருடைய மனைவி கணவரை விட்டு பிரிந்து, மகளுடன் அவரது தாயார் வீடான திருவொற்றியூருக்கு சென்றுவிட்டார். பலமுறை மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மணிகண்டன் அழைத்தும் அவர் வரமறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன், நேற்று திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.