மேலும் 320 பேருக்கு கொரோனா


மேலும் 320 பேருக்கு  கொரோனா
x
தினத்தந்தி 20 Jan 2022 2:45 PM GMT (Updated: 20 Jan 2022 2:45 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 
320 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 347 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 203 பேர் நேற்று குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 836 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,555 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் 281 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது தவிர நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் ஒருவரும், வீடுகளில் 1,273 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 33 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பரிசோதனை
நேற்று 1,525 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் இதுவரை 20 ஆயிரத்து 43 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 225 படுக்கைகள் காலியாக உள்ளது.
முககவசம் அணியாமல் சென்றது, சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக இதுவரை ரூ.62 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Next Story