கழிவுநீர் லாரி மோதி தொழிலாளி பலி


கழிவுநீர் லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Jan 2022 3:44 PM GMT (Updated: 2022-01-20T21:14:01+05:30)

கழிவுநீர் லாரி மோதி தொழிலாளி மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

சென்னையை அடுத்த பல்லாவரம், அரசமரம் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 48). தச்சுத்தொழிலாளி. இவருடைய மகன் அஜய் (23). நேற்று காலை தந்தை, மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பம்மல் நோக்கி சென்றனர்.

பல்லாவரம்-பம்மல் சாலையில் எச்.டி.எப்.சி. வங்கி அருகே சென்றபோது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியதில் குப்பன் சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story