சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,345-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.2,345-க்கு ஏலம்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:06 PM GMT (Updated: 20 Jan 2022 4:06 PM GMT)

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,345-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் 2½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 345-க்கும், முல்லை ரூ.1,440-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.35-க்கும், பட்டுப்பூ ரூ.77-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Next Story