நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி 430 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி 430 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:24 PM GMT (Updated: 20 Jan 2022 4:24 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சி அடைந்து 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சி அடைந்து 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
20 காசுகள் வீழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-445, ஐதராபாத்-415, விஜயவாடா-447, மைசூரு-450, மும்பை-490, பெங்களூரு-455, கொல்கத்தா-495, டெல்லி-490.
விற்பனை மந்தம்
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, தைப்பூசம், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு நேர ஊரடங்கு காரணமாக முட்டை விற்பனை மந்தமாகி உள்ளது. இதேபோல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படும் முட்டைகளும் அடியோடு நின்று விட்டன.
பண்ணையாளர்கள் கவலை
எனவே முட்டைகள் தேங்குவதை தவிர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story