எள், உளுந்து விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும்- விவசாயிகள்


ஆலோசனை கூட்டம்
x
ஆலோசனை கூட்டம்
தினத்தந்தி 20 Jan 2022 5:10 PM GMT (Updated: 2022-01-20T22:40:52+05:30)

எள், உளுந்து விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடுவூர்:-

எள், உளுந்து விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆலோசனை கூட்டம்

ஒருங்கிணைந்த வடுவூர் விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலசுந்தரம், ரம்யாநெடுஞ்செழியன், சூரியசேகர், ஒன்றிய கவுன்சிலர் மேனகா கார்த்திகேயன், வடுவூர் நல வர்த்தக சங்க தலைவர் ராமன், விவசாய சங்க பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 
தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. பெல்ட் வண்டி எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்றும், டயர் வண்டி எந்திரங்களுக்கு ரூ.1,900 என்றும் வாடகை நிர்ணயம் செய்வது. சம்பா, குறுவை, தாளடி, கோடை ஆகிய சாகுபடி பருவங்களுக்கும் தொடர்ந்து நெல் சாகுபடி செய்து வருவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால் ஒரே மாதிரியான நோய் தாக்குதல், பூச்சிகள் அதிக அளவில் தென்படுகிறது. இதனால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டிய செலவுகளும் அதிகமாகிறது. நெல் சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லாத நிலைமை ஏற்படுகிறது. 

மானிய விலையில்...

எனவே 3 போக நெல் சாகுபடிக்கு பதிலாக 2 போகம் நெல் சாகுபடியும், ஒரு போகம் புன்செய் பயிர் சாகுபடி செய்வது. இதற்கு வேளாண்மை துறை சார்பாக தரமான எள், உளுந்து, கடலை, சோளம் போன்ற விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

Next Story