புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 20 Jan 2022 5:56 PM GMT (Updated: 2022-01-20T23:26:56+05:30)

தினத்தந்தி

புகார் பெட்டி
குப்பை அள்ளப்படுமா?

கோபிசெட்டிபாளையம் பொலவக்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள அண்ணாமார் கோவில் அருகில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கு குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே ஊராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், பொலவக்காளிபாளையம்.


ரோட்டை சீரமைக்க வேண்டும்

  கோபி மொடச்சூர் திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட கான்கிரீட் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில். சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  ஊர் பொதுமக்கள், கோபி
 
  
குவிந்து கிடக்கும் குப்பை 

  அந்தியூர் ஒன்றியம் வேம்பத்தி கிராமம் ஓசைப்பட்டியில் உள்ளது எம்.ஜி.ஆர். காலனி. இங்குள்ள பெருமாள் கோவில் மற்றும் கருப்புச்சாமி கோவில் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
  கங்காதேவி, ஓசைப்பட்டி
  
கட்டிடம் பராமரிக்கப்படுமா? (படம்)

  திங்களூர் நல்லாம்பட்டியில் உள்ள கட்டிடத்தில் கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு அரசு கால்நடை ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. ஆனால் இடப் பற்றாக்குறை காரணமாக அந்த கட்டிடம் மூடப்பட்டது. தற்போது வேறு இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி செயல்படுகிறது. ஆனால் பழைய கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கட்டிடத்தின் மேல் மரம் வளர்ந்து காணப்படுகிறது. உடனே இந்த மரத்தை அகற்ற வேண்டும். மேலும் கட்டிடத்தை பராமரித்து வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், நல்லாம்பட்டி
  
தேங்கிநிற்கும் கழிவுநீர்

  கோபிசெட்டிபாளையம் கொங்கர்பாளையம் திருவள்ளுவர் வீதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவு நீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், திருவள்ளுவர் வீதி, கொங்கர்பாளையம்.
  
குடிநீர் கிடைக்காமல் அவதி

  தாளவாடி ஒன்றியத்தில் உள்ள திங்களூர் ஊராட்சிக்கு உள்பட்டது பாசக்குட்டை கிராமம். இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்துக்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தோட்டத்து பகுதியிலும், கிணறுகளிலும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே பழுதாகி உள்ள மின் மோட்டார் பழுதை நீக்கி சீரான முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பொதுமக்கள், பாசக்குட்டை.
  ------------


Next Story