விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 16 பேர் மீது வழக்கு


விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 16 பேர் மீது வழக்கு
x

விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரமங்கலம், 
நிலத்தகராறு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே தெற்கு நரியங்குழி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (34). விவசாயிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தின் வழியாக தியாகராஜன் சென்றபோது அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
16 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களான பரிமளா, சத்தியமூர்த்தி, திருமூர்த்தி, செல்வம், தேவி, மன்மதகாசி, சாந்தி, அலசம்மாள் ஆகியோரும் தியாகராஜனின் உறவினர்களான சிவராஜ், அரவிந்த், ராதாகிருஷ்ணன், பாப்பாத்தி, ஆதி, சுதா ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் தியாகராஜன் ஆகியோர் விக்கிரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். 
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story