நெல்லையில் எம்.எல்.ஏ. உள்பட 756 பேருக்கு கொரோனா


நெல்லையில் எம்.எல்.ஏ. உள்பட 756 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jan 2022 7:10 PM GMT (Updated: 20 Jan 2022 7:10 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் எம்.எல்.ஏ. உள்பட 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 756 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டும், தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 150 பேர் குணமடைந்து விட்டனர்.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 463 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 439 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. தொடர்ந்து அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நலமுடன் இருப்பதாகவும், கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
ஏற்கனவே, கொரோனா 2-வது அலையின்போது ரூபி மனோகரன் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் இருதவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீண்டும் 2-வது முறையாக ரூபி மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story