வாலிபரிடம் செல்போன் பறித்த மேலும் ஒருவர் கைது


வாலிபரிடம் செல்போன் பறித்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 7:15 PM GMT (Updated: 2022-01-21T00:45:04+05:30)

நெல்லையில் வாலிபரிடம் செல்போன் பறித்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
சீதபற்பநல்லூர் அருகே வேளாளர்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 21). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் செல்வதற்காக, பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ‘லிப்ட்’ கொடுப்பது போன்று கணேசனை கிருஷ்ணாபுரம் சாந்திநகர் ெரயில்வே தண்டவாளம் அருகில் அழைத்து சென்றான். அங்கிருந்த 2 பேருடன் சேர்ந்து கொண்ட சிறுவன், கணேசனை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்தான்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 2 சிறுவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்துவை (23) நேற்று கைது செய்தனர்.

Next Story