மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது + "||" + 2 arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கடையநல்லூரில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மாரிபாண்டி. கிடாரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கோபால் என்ற நவநீதகிருஷ்ணன்.
மாரிபாண்டி மீது கடையநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கும், புளியங்குடி பகுதியில் மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. நவநீதகிருஷ்ணன் மீது சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாரிபாண்டி, நவநீதகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இ்ந்த உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
சுரண்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
3. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
4. வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
ஆம்பூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது
மதுரையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்டோவை எடுத்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.