புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று; கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு


புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று; கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 20 Jan 2022 8:24 PM GMT (Updated: 20 Jan 2022 8:24 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

கொரோனா பரிசோதனைகள்

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 58 ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் 30 ஆயிரத்து 540 பேர் பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டை 66 பேர், பல்லாரியில் 952 பேர், பெலகாவியில் 442 பேர், பெங்களூரு புறநகரில் 974 பேர், பீதரில் 311 பேர், சாம்ராஜ்நகரில் 384 பேர், சிக்பள்ளாப்பூரில் 522 பேர், சிக்கமகளூருவில் 387 பேர், சித்ரதுர்காவில் 462 பேர், தட்சிண கன்னடாவில் 974 பேர், தாவணகெரேயில் 152 பேர், தார்வாரில் 698 பேர், கதக்கில் 289 பேர், ஹாசனில் 1,840 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஹாவேரியில் 65 பேர், கலபுரகியில் 658 பேர், குடகில் 195 பேர், கோலாரில் 511 பேர், கொப்பலில் 348 பேர், மண்டியாவில் 1,512 பேர், மைசூருவில் 1,352 பேர், ராய்ச்சூரில் 329 பேர், ராமநகரில் 150 பேர், சிவமொக்காவில் 373 பேர், துமகூருவில் 1,622 பேர், உடுப்பியில் 767 பேர், உத்தர கன்னடாவில் 611 பேர், விஜயாப்புராவில் 188 பேர், யாதகிரியில் 80 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 33 லட்சத்து 76 ஆயிரத்து 953 ஆக உயர்ந்து உள்ளது.

29 பேர் சாவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் இறந்தனர். பெங்களூரு நகரில் 8 பேர், கலபுரகி, மைசூருவில் தலா 5 பேர், துமகூரு, பீதரில் தலா 2 பேர், பாகல்கோட்டை, தட்சிண கன்னடா, கதக், ஹாசன், மண்டியா, ராய்ச்சூர், உத்தர கன்னடாவில் தலா ஒருவர் இறந்தனர். 18 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 515 பேர் இறந்துள்ளனர்.

வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த 22 ஆயிரத்து 143 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 30 லட்சத்து 45 ஆயிரத்து 177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 93 ஆயிரத்து 321 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 18.48 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.06 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை 5 கோடியே 98 லட்சத்து 64 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

50 ஆயிரத்தை நெருங்குகிறது

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்து 499 ஆக பதிவாகி இருந்தது. நேற்று 47 ஆயிரத்து 754 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி விட்டது. வரும் நாட்களில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு (2021) மே மாதம் ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்து 112 ஆக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்து உள்ளது.

Next Story