சசிகலா மீதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2-ந்தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்: சைதாப்பேட்டை கோர்ட்டு


சசிகலா மீதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2-ந்தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்: சைதாப்பேட்டை கோர்ட்டு
x
தினத்தந்தி 21 Jan 2022 10:41 AM GMT (Updated: 21 Jan 2022 10:41 AM GMT)

சசிகலா மீதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2-ந்தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு பிரபித்து உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம், டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டன.

ஆனால் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தை மதிக்காமல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என சசிகலா தன்னை தொடர்ந்து பிரகடனப்படுத்தி வருவது 
ஏமாற்றும் செயல். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 
சசிகலா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாம்பலம் போலீசார் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 2-ந் தேதி புகார்தாரர் (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) கோர்ட்டில் ஆஜராகி வாக்குமுலம் அளிக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


Next Story