மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் + "||" + A teenager who got used to Instagram and raped a 10th grade student

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). இவருக்கு ஆவடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர், அவரை ஆவடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். உறவினர் வீட்டில் இருந்த மாணவி, திடீரென மாயமானார். 

எங்கு தேடியும் கிடைக்காததால் இதுபற்றி அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ், அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.