ஆசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி குறித்து மர்ம ஆசாமிகளை தேடி தனிப்படை போலீசார்


ஆசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி குறித்து மர்ம ஆசாமிகளை தேடி தனிப்படை போலீசார்
x
தினத்தந்தி 21 Jan 2022 12:08 PM GMT (Updated: 2022-01-21T17:38:01+05:30)

வெள்ளகோவில் ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கொள்ளை முயற்சி
வெள்ளகோவில், மூலனூர் ரோட்டு சொரியன் கிணத்துப்பாளையம் பிரிவு அருகே இருப்பவர் பழனிச்சாமி (வயது73) இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் தனது மனைவி விஜயராணியும் குடியிருந்து கொண்டு ஜோதிடம் பார்த்துவருகின்றார். 
நேற்றுமுன்தினம் பகல் 12 மணி அளவில் 30 முதல் 35 வயது வரை உள்ள 2 மர்ம ஆசாமிகள் வந்து பழனிச்சாமி வீட்டிற்கு வந்து முன் கேட்டை திறந்து ஒருவர் மட்டும் உள்ளே வந்து கதவு திறந்துள்ளார். கதவு திறக்கும் சத்தம் கேட்டு பழனிச்சாமி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். 
அப்போது திடீரென வந்த திருடன், பழனிச்சாமி முகத்தில் கையில் வைத்திருந்த பெட்ரோலை தலையோடு சேர்த்து ஊற்றிவிட்டு, தீயை பற்ற வைத்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை எடுக்க சொல்லி மிரட்டியுள்ளார். சுதாரித்துக் கொண்ட பழனிச்சாமி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திவிட்டு சத்தம் போட்டுள்ளார்.
தனிப்படை போலீசார்
 சத்தத்தை கேட்ட பழனிச்சாமியின் மனைவி விஜயராணி மாடியில் இருந்து யார் என்று கேட்டுக் கொண்டே கீழே வந்துள்ளார். இதை அறிந்த திருடன் பாட்டிலில் இருந்த மீதி பெட்ரோலை விஜயராணி முகத்தில் ஊற்றிவிட்டு வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வெள்ளகோவில் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்குகளில் உள்ள  கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு யாரெல்லாம் கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்றுள்ளனர் என்று விசாரித்து வருகின்றனர்.
=================

Next Story