மாவட்ட செய்திகள்

மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு + "||" + Baby shower for female police at Madhavaram police station

மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு

மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு
மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த சக போலீசார் முடிவு செய்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அரவிந்தா(வயது 29). இவருடைய கணவர் சதீஷ். அரவிந்தா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார். அரவிந்தா, தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவருக்கு போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த சக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் அரவிந்தாவுக்கு மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா ஆகியோர் முன்னிலையில் வளைகாப்பு விழா நடந்தது. இதில் 7 வகையான உணவுகள், 9 வகையான பழங்கள், வெள்ளி வளையல்கள், பட்டுப்புடவை உள்ளிட்டபொருட்கள் சீர்வரிசையாக வைக்கப்பட்டது. விழாவில் சக போலீசார் கலந்து கொண்டனர்.