பொன்னேரி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


பொன்னேரி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2022 3:17 PM GMT (Updated: 2022-01-21T20:47:26+05:30)

பொன்னேரி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விபத்து

சென்னை மாதவரம் தணிகாசலம் நகர் 3-வது பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத் (வயது 19). இவரது நண்பர் சங்கர் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் கோனே நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது பொன்னேரி அருகே உள்ள வண்டி காவனூர் கிராமத்தின் வழியாகச் செல்லும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

பலி

இந்த சம்பவத்தில் பிரசாத் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் படுகாயம் அடைந்த சங்கரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story