மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது + "||" + 2 arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளம் மேலத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜஸ்டின் கோபிநாத் (வயது 32). வள்ளியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (51). இவர்கள் இருவரும் அடிதடி மற்றும், திருட்டு, வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் நேற்று ஜஸ்டின் கோபிநாத் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
சுரண்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
3. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
4. வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
ஆம்பூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது
மதுரையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்டோவை எடுத்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.