தமிழ் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்


தமிழ் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2022 7:34 PM GMT (Updated: 2022-01-22T01:04:47+05:30)

நெல்லையில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் பொதுப்பாதையில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அருந்ததி மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்தியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தச்சை மாடத்தி தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன், நெல்லை தொகுதி செயலாளர் கோவிந்தன், கரும்புலி குயிலி பேரவை துணை செயலாளர் தச்சை பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற்சங்க செயலாளர் விடியல் வீரபெருமாள், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்து வளவன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி சிந்தா, மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை நிஜாம், ஆதி தமிழர் கட்சி ராமமூர்த்தி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story