பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2022 7:46 PM GMT (Updated: 2022-01-22T01:16:24+05:30)

நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற காரணமான பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சித் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்துகுமார், தச்சநல்லூர் தெற்கு மண்டல தலைவர் முருகப்பா, விசுவ இந்து பரிஷத் பொறுப்பாளர் ஆறுமுகக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் சோமசுந்தரம், வக்கீல் அணி கார்த்திகேயன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் குமரன், மண்டலத் தலைவர்கள் வாசுதேவன், செல்வகுமரன், சுயம்பு, ஜெயசித்ரா, பேராச்சி கண்ணன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story