சாலை பராமரிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலை பராமரிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2022 8:04 PM GMT (Updated: 2022-01-22T01:34:07+05:30)

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர்ஆழ்வார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துக்கால படியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது

Next Story