கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டியது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 21 Jan 2022 9:22 PM GMT (Updated: 21 Jan 2022 9:22 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டி உள்ளது. புதிதாக 48 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டி உள்ளது. புதிதாக 48 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பாதிப்பு சதவீதம்

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 49 ஆயிரத்து 832 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 48 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 29 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் 85 பேர், பல்லாரியில் 767 பேர், பெலகாவியில் 518 பேர், பெங்களூரு புறநகரில் 1,036 பேர், பீதரில் 351 பேர், சாம்ராஜ்நகரில் 576 பேர், சிக்பள்ளாப்பூரில் 772 பேர், சிக்கமகளூருவில் 319 பேர், சித்ரதுர்காவில் 438 பேர், தட்சிண கன்னடாவில் 897 பேர், தாவணகெரேயில் 249 பேர், தார்வாரில் 373 பேர், கதக்கில் 336 பேர், ஹாசனில் 1,889 வைரஸ் பாதிப்பு உறுதியானது.

ஹாவேரியில் 143 பேர், கலபுரகியில் 1,164 பேர், குடகில் 317 பேர், கோலாரில் 645 பேர், கொப்பலில் 324 பேர், மண்டியாவில் 1,506 பேர், மைசூருவில் 915 பேர், ராய்ச்சூரில் 367 பேர், ராமநகரில் 330 பேர், சிவமொக்காவில் 500 பேர், துமகூருவில் 2,021 பேர், உடுப்பியில் 1,018 பேர், உத்தர கன்னடாவில் 682 பேர், விஜயாப்புராவில் 327 பேர், யாதகிரியில் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 34 லட்சத்து 25 ஆயிரத்து 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பாதிப்பு சதவீதம் 19.23 ஆக உயர்ந்து உள்ளது.

6 கோடி பேருக்கு சோதனை

பெங்களூருவில் 6 பேர், உடுப்பியில் 4 பேர், மைசூருவில் 3 பேர், ஹாவேரியில் 2 பேர், பெலகாவி, தட்சிண கன்னடா, தார்வார், ஹாசன், ராமநகர், சிவமொக்கா, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என 22 பேர் இறந்தனர். 19 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. வைரசுக்கு இதுவரை 38 ஆயிரத்து 537 பேர் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர். பலி எண்ணிக்கை 0.04 சதவீதமாக உள்ளது.

நேற்று 18 ஆயிரத்து 115 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 30 லட்சத்து 63 ஆயிரத்து 292 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரத்து 143 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 6 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story