மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது + "||" + molestation case

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
பெங்களூருவில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மகளுக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு நகரில் 60 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த முதியவர் தனது 22 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி இறந்த பின்னர் தனது மகளுக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளார். ஆனாலும் அந்த முதியவர், மகளின் உடல் பாகங்களை தொட்டு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் குளித்துவிட்டு உடை மாற்றுவதை ஒளிந்து இருந்து முதியவர் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் குளித்துவிட்டு உடை மாற்றி கொண்டு இருந்து உள்ளார். அப்போது கதவின் வழியாக முதியவர் எட்டிப்பார்த்து உள்ளதாக தெரிகிறது.

மரக்கட்டையால் தாக்குதல்

பின்னர் முதியவர் கதவை திறந்து அறைக்குள் சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், முதியவரை பிடித்து தள்ளி விட்டு உறவினர் ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றும்படி கூறியுள்ளார். அதன்பேரில் உறவினர் அங்கு வந்து உள்ளார். அப்போது இளம்பெண்ணையும், உறவினரையும் மரக்கட்டையால் முதியவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முதியவர் மீது அவரது மகள் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.