கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பொதுமக்கள்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பொதுமக்கள்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 9:35 PM GMT (Updated: 2022-01-22T03:05:30+05:30)

கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரட்டினர். இது சம்பந்தமான வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையம்
கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரட்டினர். இது சம்பந்தமான வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஒற்றை ஆண் யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த நிலையில் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பகுதியில்  நேற்று மாலை 5 மணி அளவில் ஒற்றை ஆண் யானை புகுந்தது. யானை புகுந்ததை கண்டதும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 6 மணி அளவில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. 
வைரலான வீடியோ
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது கடம்பூர் மலைக்கிராமம் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் கிராம பகுதிக்குள் யானைகள் புகுந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.  
கடம்பூர் அருகே யானையை காட்டுக்குள் ெபாதுமக்கள் விரட்டும் வீடியோ வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story