சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்கு


சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jan 2022 10:37 PM GMT (Updated: 2022-01-22T04:07:28+05:30)

சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர்.
இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கொரோனா பரவும் வகையிலும் மறியலில் ஈடுபட்டதாக கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story