வீட்டில் பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டில் பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 Jan 2022 10:37 PM GMT (Updated: 2022-01-22T04:07:30+05:30)

வீட்டில் பீரோவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ருக்குமணி (வயது 35). செல்வம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ருக்குமணி நேற்று வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார்.
பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு, வீட்டிற்குள் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து ருக்குமணி கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் காரியானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் காரியானூர் கிராமத்தில் நடந்த 4-வது திருட்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story