4 ஆடுகள் திருட்டு


4 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 22 Jan 2022 5:03 PM GMT (Updated: 2022-01-22T22:33:57+05:30)

ராமநாதபுரம் அருகே 4 ஆடுகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ளது கீரிப்பூர்வலசை. இந்த ஊரைச்சேர்ந்தவர் நாகராஜன் (வயது50). ஊர் தலை வராக இருந்து வருகிறார். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் வீட்டில் உள்ள ஆட்டு தொழுவத்தில் அடைத்து வைத்திருந்தாராம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அதில் 4 ஆடுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதேபோன்று அந்த பகுதியில் இரவு நேரங் களில் ஆடுகளை மர்ம நபர்கள் கார், சரக்கு வாகனம் முதலியவற்றில் வந்து திருடிச்சென்று வருவது வாடிக்கையாக இருந்து வருகிறதாம். இதுகுறித்து நாகராஜன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

Next Story