தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Jan 2022 5:32 PM GMT (Updated: 2022-01-22T23:02:30+05:30)

தினத்தந்தி புகார் பெட்டி

குப்பைகள் அகற்றப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராணித்தோட்டம் தடி டிப்போ சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மண்ணடி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஆண்டித்தோப்பு மாமூட்டு பாலம் முதல் மண்ணடி வரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                           -எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
தம்மத்துக்கோணம் முத்தாரம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனேயே சாலையில் சென்று வருகின்றனர். எனவே அபாய நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
       -அருண், தம்மத்துக்கோணம்.
ஆபத்தான மின்கம்பம்
மேலமணக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட புனித ஆண்ட்ரூஸ் சர்ச்  தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கிறார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுமி ராஜேஷ், மணக்குடி.
சாலை சீரமைக்கப்படுமா? 
நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட சேனம்விளை சி.எஸ்.ஐ. சர்ச்சில் இருந்து கோமான்விளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?                                      -ஜெஸ்லின், சேனம்விளை.
எரியாத தெருவிளக்கு
கணபதிபுரம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                         -குமார், கணபதிபுரம்.
 தொற்றுநோய் பரவும் அபாயம்
நாகர்கோவில் கோட்டார் லாலாபுதுத்தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை சுத்தம் செய்து கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                     -அய்யப்பன், கோட்டார்.

Next Story