ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2022 5:45 PM GMT (Updated: 2022-01-22T23:15:16+05:30)

சிங்கம்புணரியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத்தலைவர் செல்வி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் கோரிக்கை குறித்த விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கிய செல்வராஜ், வைரம், ராகவன், கூட்டுறவு சங்க தலைவர் பால்துரை ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கடந்த ஆட்சியில் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது. மீண்டும் பழைய இடத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story