தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 22 Jan 2022 5:49 PM GMT (Updated: 22 Jan 2022 5:49 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?
திருச்சி பிராட்டியூர் பூண்டி மாதா நகரில்  கடந்த 6 மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்தப்பகுதி இருட்டாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக பழைய தெருவிளக்கை மாற்றி புதிய தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பூண்டிமாதா நகர், திருச்சி.

ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நெய்வேலி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்  உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் மது பிரியர்களின் கூடாரமாக ஆரம்ப சுகாதார நிலையம் மாறி உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகநாதன், முசிறி, திருச்சி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனை அப்பகுதியில் சுற்றித்திரியும் ஏராளமான கால்நடைகள் கிளறி விடுகிறது. இதனால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

ஆபத்தான ஆலமரம்
திருச்சி மாநகராட்சி 6-வது வார்டு கொண்டையம்பேட்டை பகுதியில்  சாலையோரத்தில் பட்டுபோன நிலையில் ஆபத்தான பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது.  இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி 17-வது வார்டு தென் கள்ளர் தெருவில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முசிறி, திருச்சி.

வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி, புளியஞ்சோலை பசலிக்கோம்பையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் மூலம்  தண்ணீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.

Next Story