நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2022 5:52 PM GMT (Updated: 22 Jan 2022 5:52 PM GMT)

விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:
விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு  உடனடியாக மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் தங்க.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா மினி கிளினிக்
அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பக்கிரிசாமி உள்பட அ.தி.மு.க.வினர்  கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கிரிதரன், வக்கீல் சுப்பையன், நகரச் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட கவுன்சிலர் தீபன் உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருக்குவளை
திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு நாகை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. .கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேதியன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலைசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணை செயலாளர் மீனா, மாவட்ட மகளிரணி செயலாளர் இளவரசி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா
முன்னிலை வகித்தார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் வெண்மணி குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய துணை செயலாளர்கள் காத்தமுத்து, விஸ்வேஸ்வரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் துரை பாஸ்கரன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story