பெண் தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Jan 2022 5:54 PM GMT (Updated: 2022-01-22T23:24:17+05:30)

பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட புதுகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 56). கூலி தொழிலாளியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த சரஸ்வதி வீட்டில் யாரும் இல்லாதபோது  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story