மானாமதுரை செய்களத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு


மானாமதுரை செய்களத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 22 Jan 2022 6:13 PM GMT (Updated: 2022-01-22T23:43:16+05:30)

மானாமதுரை செய்களத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் அரசு ெதாழிற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து இருந்தார். இதை தொடர்ந்து மானாமதுரையில் தொழிற்பயிற்சி மையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மானாமதுரை அருகே செய்களத்தூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்கலாம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த இடத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் இங்கு தொழிற்பயிற்சி மையம் அமைப்பது தொடர்பான திட்டவரைவு உள்ளிட்ட கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின்போது மானாமதுரை தாசில்தார் தமிழரசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story