மாவட்ட செய்திகள்

புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection

புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
திருச்சி, ஜன.23-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் தற்போது கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை 4,580 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் 705 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.
 2 பேர் பலி
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண் என்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,118 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,107 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 452 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பினர். இதுவரை 81,224 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா; 31 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. இந்தியாவில் மேலும் 2,897- பேருக்கு கொரோனா- 54 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது- இன்று 38 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. அந்தவகையில் இன்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.