வடலூரில் வாரச்சந்தை இடமாற்றம்; வியாபாரிகள் சாலை மறியல்


வடலூரில் வாரச்சந்தை இடமாற்றம்; வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jan 2022 6:27 PM GMT (Updated: 22 Jan 2022 6:27 PM GMT)

வடலூரில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடலூர்,

வடலூரில் உள்ள கடலூர் சாலையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரச்சந்தையை தற்காலிகமாக உழவர் சந்தைக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று வடலூர் உழவர் சந்தையில் வாரச்சந்தை நடைபெற்றது. ஆனால் அங்கு கடைகள் வைக்க போதுமான இடவசதி இல்லாததால் வியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.  இதையடுத்து அவர்கள் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ததை கண்டித்து வடலூரில் உள்ள சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
போக்குவரத்து பாதிப்பு

அப்போது வியாபாரிகள், இடநெருக்கடியை தவிர்க்க வாரச்சந்தையை மீண்டும் கடலூர் சாலைக்கே மாற்ற வேண்டும் என கூறினர். அதற்கு அதிகாரிகள், இது குறித்து மேல் அதிகாரிகளிடம்  பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story