மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2022 6:28 PM GMT (Updated: 22 Jan 2022 6:28 PM GMT)

விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:-
விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
 விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், நகரசெயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர் செல்வி, மணல்மேடு பேரூர் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் சங்கர், இணை செயலாளர் முருகவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
சீர்காழி
சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு  அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் பழையாறு கே. எம். நற்குணன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், சிவகுமார், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்றார். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். 
விவசாயிகள் தனது வயலில் டிராக்டர் மூலம் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சீனிவாசன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்
 குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
பேரூர் செயலாளர் எம்.சி.பாலு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன் பேசினார். இதில் வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கஜேந்திரன், கோனேரிராஜபுரம் கூட்டுறவு வங்கி சங்க தலைவர் சந்திரபோஸ்வர்மா, பேரூர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெய பாலகிருஷ்ணன்,  ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைத்தியநாதன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பொறையாறு
தரங்கம்பாடி  தாசில்தார் அலுவலகம் முன்பு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கபடிபாண்டியன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story