மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2022 6:33 PM GMT (Updated: 2022-01-23T00:03:45+05:30)

மது விற்ற 4 பேர் கைது

மணப்பாறை, ஜன.23-
மணப்பாறையை அடுத்த செவலூர் பிரிவு சாலை அருகே மதுபாட்டில் விற்றதாக வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), டி.உடையாபட்டியைச் சேர்ந்த நெல்சன்ராஜ் (25) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து  90 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதே போல் புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் மதுபாட்டில் விற்றதாக குளவாய்பட்டியைச் சேர்ந்த ராமன் (62), வடக்கிக்களம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி (39 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Next Story