இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா


இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jan 2022 6:36 PM GMT (Updated: 2022-01-23T00:06:29+05:30)

கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 68 ஆயிரத்து 643 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 878 பேர் பலியான நிலையில், 64 ஆயிரத்து 934 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 587 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
அதாவது சென்னை மற்றும் திருச்சியில் இருந்து கடலூர் வந்த 3 பேருக்கும், கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 108 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, டாக்டர் பிரதீப், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் ராஜேஷ், கோபாலகிருஷ்ணன் உள்பட 476 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 69 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்கள்

மேலும் நேற்று மட்டும் 339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,071 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 17-ல் இருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் பரங்கிப்பேட்டையில் 3 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story