தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Jan 2022 6:47 PM GMT (Updated: 2022-01-23T00:17:30+05:30)

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி ஒழுகைமங்கலம் ஆற்றுப்பாலத்தில் கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகிறது. ஆற்று பாலத்தில் தண்ணிர் தேங்கி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                                                                                                                                        -பொதுமக்கள், தரங்கம்பாடி
புகார் பெட்டி செய்தி எதிரொலி:
மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது 
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதி பெருகவாழ்ந்தான் கடைத்தெருவில்  மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்களில் செல்லும் மின்கம்பிகளில் உள்ள சிறிய இரும்பு வயர்கள் அறுந்து காணப்பட்டன. இதனால் மின்கம்பிகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருந்து வந்ததால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.  இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

                                                                                                     பெருகவாழ்ந்தான் கடைத்தெருவாசிகள், கோட்டூர்.-

Next Story