மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் பலி + "||" + Elderly man killed to corona in Perambalur district

கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 247 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வேப்பந்தட்டையை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் 12,544 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 339 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,047 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 16,962 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,203 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா; 31 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. இந்தியாவில் மேலும் 2,897- பேருக்கு கொரோனா- 54 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது- இன்று 38 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. அந்தவகையில் இன்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.