அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு


அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 22 Jan 2022 8:24 PM GMT (Updated: 22 Jan 2022 8:24 PM GMT)

அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்:

வார்டுகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகர்மன்ற தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கும், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் நகராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில், 18-வது வார்டு தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும், 10-வது வார்டு தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும், 1, 2, 5, 6, 9, 12, 14, 15 ஆகிய வார்டுகள் பொதுவில் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3, 4, 7, 8, 11, 13, 16, 17 ஆகிய வார்டுகள் பொதுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டத்தில்... 
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள மொத்தம் 21 வார்டுகளில் 2, 18 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும், 9, 10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும், 4, 7, 13, 15, 16, 17, 19, 20, 21 ஆகிய வார்டுகள் பொதுவில் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1, 3, 5, 6, 8, 11, 12, 14 ஆகிய வார்டுகள் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரியலூர்-ஜெயங்கொண்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும்.

Next Story