மின்வாரிய பெண் என்ஜினீயர் கைது


மின்வாரிய பெண் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2022 8:51 PM GMT (Updated: 2022-01-23T02:21:27+05:30)

வேலை வாங்கித்தருவாக ரூ.22 லட்சம் மோசடி செய்த மின்வாரிய உதவி பெண் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மதுரை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மதுரை
வேலை வாங்கித்தருவாக ரூ.22 லட்சம் மோசடி செய்த மின்வாரிய உதவி பெண் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மதுரை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மின்வாரியத்தில் வேலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வம் (வயது 56). இவர் தனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதுரை மாவட்டம் சோழவந்தான் மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யாவை (34) அணுகி உள்ளார்.
அவரும் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிஉள்ளார். மேலும், அதற்கு பணம் செலவாகும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, தெய்வம், ரூ.12 லட்சத்தை நேரடியாகவும், ரூ.8 லட்சத்தை சத்யாவின் வங்கி கணக்கிலும் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் சத்யா, வேலை வாங்கி கொடுக்கவில்லையாம்.
கைது
இதுகுறித்து தெய்வம் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உதவி என்ஜினீயர் சத்யா, மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கியதாகவும், இதேபோன்று மேலும் 2 பேரிடம் தலா ரூ.1 லட்சம் வாங்கியதாகவும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மாவட்ட குற்றத்தடுப்புபிரிவு போலீசார், உதவி என்ஜினீயர் சத்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story