ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு


ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Jan 2022 9:53 PM GMT (Updated: 2022-01-23T03:23:44+05:30)

ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவிலுக்கு சென்றார்
ஊஞ்சலூர் அருகே உள்ள கருமாண்டாம்பாளையம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 39). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு தனது குடும்பத்துடன் கரூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பூர் கோவிலுக்கு சென்றுவிட்டு் அன்று இரவு 9.30 மணி அளவில் கருமாண்டாம்பாளையம் வந்தார்.
ஆனால் தனது வீட்டு்க்கு செல்லாமல் அருகே சாணார்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டு்க்கு சென்று தங்கினார். மறுநாள் 20-ந் தேதி காலை 10.30 மணி அளவில் கருமாண்டாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
7 பவுன் திருட்டு
அப்போது வீட்டு் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு 2 படுக்கை அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலுள்ள துணிமணிகள் சிதறி கிடந்தன. அதில் ஒரு பீரோவில் உள்ள ரூ.75 ஆயிரம், மற்றொரு படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கக் காசுகள் 4, அரை பவுன் தங்கக் காசுகள் 4, ஒரு பவுன் தங்க பிரேஷ்லெட் உள்பட மொத்தம் 7 பவுன் நகைகளை காணவில்லை.
வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 பீரோக்களையும் உடைத்து திறந்து 7 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரத்தை திருடி சென்றனர் என்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோவன் மலையம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு் தப்பிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story