மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் எச்.ராஜா கைது: சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

தஞ்சாவூரில் எச்.ராஜா கைது: சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் எச்.ராஜா கைது: சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் எச்.ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து நேற்று பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி மாணவி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலம் டவுன் அம்பேத்கர் சிலை அருகில் பிற்பகலில் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ராஜேஸ்குமார் உள்பட பா.ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.