ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்


ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 Jan 2022 5:19 PM GMT (Updated: 23 Jan 2022 5:19 PM GMT)

ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொண்டி, 
ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வு
திருவாடானை தாலுகாவில் முழு ஊரடங்கையொட்டி திருவாடானை, தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சில ஓட்டல், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்த நிலையில் மற்ற கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
இதனால் வீதிகள் அனைத்தும் வெறிச் சோடி காணப் பட்டன. தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலை மையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர்.
 அப்போது திருவாடானை, தொண்டி மற்றும் என்.மங்கலம் பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டு இறைச்சி, கோழி கடைகளை திறந்து வியாபாரம் செய்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எலக்ட்ரானிக் தராசு, எடை எந்திரங்களும் கைப்பற்றப்பட்டன. இதேபோல் எம்.ஆர். பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். 
முககவசம்
திருவாடானை டாஸ்மாக் மதுபானக்கடை அருகில் முட்பு தரில் மறைத்து வைத்து மதுபானம் விற்றதை கண்டறிந்து ஒரு சாக்குப்பையில் இருந்த 6 மதுபாட்டில்களை தாசில்தார் செந்தில்வேல் முருகன் முன்னிலையில் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்தவர்களை பல இடங்களில் எச்சரித்து அனுப்பிய போலீசார் பல இடங்களில் அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

Next Story