மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:49 PM GMT (Updated: 2022-01-24T23:19:56+05:30)

விவசாயிகள் சங்க தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

திருவாரூர்;
விவசாயிகள் சங்க தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  போலீஸ் சூப்பிரண்டிடம் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 
கோரிக்கை மனு
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குருசாமி தலைமையில் மாவட்ட தலைவர் சுப்பையன், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாநில துணை செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
 காவிரி ஆற்றின் குறிக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கடந்த 18-ந் தேதி காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில்  முற்றுகை போராட்டம் நடத்தினோம்.
ஜனநாயக பூர்வமான எங்களது போராட்டத்தையும் எங்களது சங்கத்தையும் ஒருவர் சமூக வலைதளங்களில் மோசமாக  விமர்சித்து கொலை மிரட்டல் விடுத்து பேசி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். 
கைது செய்ய கோரிக்கை
எங்களது தலைவர் பி.ஆர்.பாண்டியன் மரியாதைக்கு பங்கம் விளைவித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்ய  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். 

Next Story