ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்


ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:17 PM GMT (Updated: 2022-01-24T23:47:06+05:30)

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயங்காத நிலையில் விவசாயிகள் கொண்டுவரும் கரும்புகளை வேறு பகுதியில் உள்ள கூட்டுறவு ஆலைகளுக்கு அனுப்பி வைத்து அரவை செய்து வருகின்றனர். இதனால் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.
எனவே இந்த ஆண்டு (2021-2022) கரும்பு அரவையை தொடங்கக் கோரி கரும்பு விவசாயிகள், பா.ஜ.க.வினர், தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story