தேசிய பெண் குழந்தைகள் தின விழா


தேசிய பெண் குழந்தைகள் தின விழா
x
தினத்தந்தி 24 Jan 2022 7:32 PM GMT (Updated: 2022-01-25T01:02:05+05:30)

விருதுநகரில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர், 
தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மற்றும் வேல்டுவிஷன் இந்தியா ஆகியவை இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை மருளுத்து கிராமத்தில்  நடத்தின. விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி தலைமை தாங்கி பேசினார். இதில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, தவிர்க்கவேண்டிய குழந்தை திருமணங்கள், பெண் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினர் கலாராணி, மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் பிரிவு காவல்துறை பிரிவு ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர்கள் வகுளாதேவி, அழகு ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாராணி, கார்த்திக், சைல்டுலைன் குருசாமி, வேல்டு விஷன் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story